
#மஹாபெரியவா இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு? "தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம் ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம் கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண" கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம். தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள். ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானம்
ஆகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண் குழந்தையை
பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்து விடுகிறான். பெண்ணைப் பெற்ற தந்தைக்கு? தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள், பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள், தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள், நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி
செய்கிறது மஹாபெரியவா அருள், “தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை. அந்த தெய்வமே நேரில் வந்தால் பெண் குழந்தை.” ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp unroll
Follow us on Twitter
to be informed of the latest developments and updates!
Follow @tivitikothreadYou can easily use to @tivitikothread bot for create more readable thread!